மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி வட்டம், ஆறுபாதி கிராமம்
ஸ்ரீ பூர்ணா ஸ்ரீ புஷ்கலா ஸமேத ஸ்ரீ மங்கள சாஸ்தா திருக்கோவில் திருப்பணி கைங்கர்யப் பத்திரக்கை
கலியுகத்தில் தன் பக்தர்களுக்கு நேரிடும் எண்ணற்ற இன்னல்களை நினைத்த இடத்தில் நினைத்த மாத்திரம் களைந்து அநுக்ரஹித்து வரும் ஸ்ரீ மஹா சாஸ்தா தமிழ்நாட்டில் பல இடங்களில் கோவில் கொண்டு அருள் பாலித்து வரும் பல கிராமங்களில் மயிலாடுதுறை அருகே உள்ள ஆறுபாதி கிராமமும் ஒன்று. இங்குள்ள ஸ்ரீ மங்கள சாஸ்தாவின் கிருபா கடாட்சத்தை அளவிட முடியாதது.
தற்போது இந்த ஆலயம் விமானம், காம்பவுண்டு சுவர்கள் முற்றிலும் சிதிலம் அடைந்த நிலையில் உள்ளது. “புதிதாக கோவில்கள் கட்டுவதை விட பழைய கோவில்களை செப்பணிட்டு பூஜைகள் சரிவர செய்து வருவதே சிறப்பு” என்பது காஞ்சி ஸ்ரீ மஹா ஸ்வாமிகள வாக்கு.
ஆகவே இத்திருக்கோவிலுக்கு அபிஷேகத்திற்கு ஒரு போர்வெல் எடுத்து மற்ற திருப்பணிகள் யாவும் செய்து முடித்து விரைவில் 4 கால கும்பாபிஷேகம் செய்ய பல பக்தர்களின் அவா.
எல்லா திருப்பணிகளுடன் 4 கால கும்பாபிஷேகத்திற்கு மிக குறைந்த பட்ஜெட்டாக ரூ.20 லட்சம் தேவைப்படுகிறது.
ஆகவே இதைக் காணும் பக்தர்கள் தங்களால் இயன்ற பெருந்தொகையை கீழ்கண்ட வங்கிக் கணக்கிற்கு செலுத்தி மறக்காமல் பணம் அனுப்பிய விபரங்களை 94878 52555 என்ற Whatsapp எண்ணிற்கு மெசேஜ் மூலம் தெரிவிக்க வேண்டுகிறோம். மேலும் இந்த திருப்பணியை கீழ்கண்ட கமிட்டியின் வங்கிக் கணக்கு மூலம் செய்து முடிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
